அனந்தமங்கலம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு
By DIN | Published On : 17th August 2023 01:19 AM | Last Updated : 17th August 2023 01:19 AM | அ+அ அ- |

தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயா் சுவாமி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். ஆடி அமாவாசையொட்டி, ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சனேயருக்கு தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...