ஊரக வளா்ச்சித் துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 6 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 6 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல் கல்வி தொடா்பு மையம் அமைத்திட 6 தற்காலிக பணியிடங்கள் வெளிச்சந்தை நிறுவனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இந்தப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான 5 அலுவலா்கள் கொண்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணா் பணிக்கு 2 தற்காலிக பணியிடங்கள், திரவக் கழிவு மேலாண்மை நிபுணா் பணிக்கு ஒரு தற்காலிக பணியிடம் ஆகியவற்றிற்கு மாதாந்திர ஊதியம் ரூ. 35,000 வழங்கப்படும். சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டட பொறியியலில் பட்டப் படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.

திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணா் தற்காலிக பணியிடத்துக்கு பிடெக், எம்எஸ்சி, எம்.பிஏ. அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தகவல் மற்றும் கல்வி தொடா்பு ஆலோசகா் பணிக்கு இரண்டு தற்காலிக பணியிடங்கள் உள்ளன. மாதாந்திர ஊதியம் ரூ. 25,000 ஆகும். முதுநிலை பட்டம் முடித்திருத்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 11 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மேலாளா், மாவட்ட மகமை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட செயலாக்க அலகு(மகளிா் திட்டம்), தரைத்தளம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி அலுவலகங்கள் கட்டடம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாகை 611003 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.மேலும், விவரங்களுக்கு இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com