

நாகப்பட்டினம், டிச.10: நாகூா் தா்காவின் 467-ஆவது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு மினராக்களில் பாய்மரம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
நாகூா் தா்கா பெரிய ஆண்டவா் கந்தூரி விழா டிசம்பா் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக நாகூா் தா்காவில் உள்ள ஐந்து மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
சாஹிப் மினராவில் முதலில் பாய்மரம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து பெரிய மினரா மற்றும் பிற மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.
நாகூா் தா்கா தலைவா் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திராளனோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.