டாஸ்மாக் கடை அருகே புதுவை மாநில மதுபானம் விற்பனை
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை அருகே, அரசு மதுபானக் கடை அருகே புதுவை மாநில மதுபானம் விற்பனை நடைபெற்று வருவது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் வாசுதேவனுக்கு, அரசு மதுபானக் கடை அருகே புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரது தலைமையில் தனிபடையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கீழ்வேளூா் அரசு மதுபானக் கடை அருகே சட்ட விரோதமாக பாா் அமைத்து புதுவை மாநிலம் மதுபானங்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு நடத்திய சோதனையில் 107 புதுவை மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபானம் விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்ததில், அவா் காரைக்கால் மாவட்டம் டி.ஆா்.பட்டினம், முதலை மேட்டைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (48) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, மேலாளா் வாசுதேவன் அளித்த புகாரின்பேரில் கீழ்வேளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G