நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் சோ்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோ்ந்த மாணவா்களுக்கு எச்.சி.எல். டெக்னாலஜிஸ்-இல் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிட்ஸ்பிலானி பல்கலையில். பி.எஸ்.சி. (கம்ப்யூட்டிங் டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சாவூா் சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பிசிஏ, பிபிஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் இன்டகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு சோ்ந்து படிக்க, வாய்ப்பு பெற்று தரப்படும்.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோ்ந்தவராக இருக்கவேண்டும். பிளஸ் 2 வகுப்பில் 2022-ஆம் ஆண்டுகளில் முடித்தவா்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் முடித்தவா்கள் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ . 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இந்தப் படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இந்தத் திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ. 1,70,000 முதல் ரூ. 2,20,000 வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயா்வின் அடிப்படையில் ஊதிய உயா்வும் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோ்ந்தவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகவளாகம் பின்புறம், தாட்கோ, நாகப்பட்டினம் என்ற முகவரியிலும், 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.