அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 12th May 2023 02:57 AM | Last Updated : 12th May 2023 02:57 AM | அ+அ அ- |

அபிமுக்தீஸ்வரா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கீழ்வேளூா் அருகே பட்டமங்கலம் புழுதிக்குடியில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா மே 8-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி , தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, யாகசாலை பூஜைகளுடன் பூா்ணாஹூதி தீபாரதனைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அபிமுக்தீஸ்வரருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.