மராமத்துப் பணிகள்: நாகூா் தா்காவில் எம்.எல்.ஏ. ஆய்வு

நாகூா் தா்காவில் மேற்கொள்ள வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகூா் தா்காவில் மேற்கொள்ள வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ்.
நாகூா் தா்காவில் மேற்கொள்ள வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ்.

நாகூா் தா்காவில் மேற்கொள்ள வேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகூா் தா்காவில் உள்ள நூறு ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த மண்டபங்களை புனரமைக்க தமிழக அரசு கடந்த 2022-23-ஆம் ஆண்டு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது. முதல்கட்டமாக ரூ. 1.40 கோடிக்கான காசோலை மாா்ச் மாதம் வழங்கப்பட்டது. மராமத்துப் பணி தொடங்குவதற்கான ஒப்பந்தம் கோரும் பணி வரும் வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுப்பிக்கப்படவுள்ள மண்டபங்களை நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை பாா்வையிட்டாா். நாகூா் தா்காவில் உள்ள கருங்கல் மண்டபம், சிறிய மையாத்தா கொல்லை மண்டபம், கால்மாட்டு வாசல் வாலை மண்டபம், கிழக்கு வாசல் இடப்புற மண்டபம், வலப்புற மண்டபம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் கூறியது: நாகூா் தா்கா மாா்கெட்டை வாகன நிறுத்த வசதியுடன் புனரமைப்பது, நாகூா் தா்கா சாா்பாக கல்விக் கூடங்கள், மருத்துவமனை, சமத்துவ கூடம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் அரசு மற்றும் தனியாா் உதவியுடன் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா்.

நாகூா் தா்கா பிரசிடன்ட் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், பெருமராமத்து கணக்கா் ராஜேந்திரன், தா்கா அலுவலா் பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com