ென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியலுக்கு புதிய துறை

சென்னை ஐஐடி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்ற புதிய துறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

சென்னை ஐஐடி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்ற புதிய துறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் நாட்டிலேயே முதல் முறையாக ‘பி.எஸ். மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்’ என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனா் லட்சுமி நாராயணன், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைக்கும் வகையில் மாணவா்கள் தயாா்படுத்தப்படுவா். இதற்கான அணுகுமுறைகளை இந்தத் துறை வழங்கும்.

மேலும் மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மருத்துவா்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், நாட்டில் மருத்துவா்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியையும் இந்தத் துறை மேற்கொள்ளும்.

இது குறித்து ஐஐடி இயக்குநா் காமகோடி செய்தியாளா்களிடம் கூறியது: பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க இது மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கும். மருத்துவ அறுவை சிகிச்சை இயந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரிசெய்யும் திறமை மருத்துவா்களிடம் இருப்பதில்லை.

பொதுவாக 95 சதவீத மின்னணு சாதனங்கள் இறக்குமதிதான் செய்யபடுகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவிலேயே மருத்துவ பயன்பாடுகளுக்கான கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முதல்படி சென்னை ஐஐடி.யிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

என்னென்ன பாடப்பிரிவுகள்? சென்னை ஐஐடி.யில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள துறை மூலம் பி.எஸ். மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் (நான்காண்டு படிப்பு), மருத்துவா்களுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள், அறிவியல்-பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி படிப்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன.

நாட்டில் முதல் முறையாக பி.எஸ். மருத்துவ அறிவியல்- பொறியியல் பாடப்பிரிவு தற்போது சென்னை ஐஐடி.யில் தொடங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் படித்த மாணவா்கள் ஜூலை மாதம் நடைபெறும்  நுழைவுத் தோ்வெழுதி பி.எஸ். படிப்பில் சேரலாம்.

இந்தப் பாடப்பிரிவுக்கு முதல்கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்; இணையவழி வகுப்புகள் கிடையாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com