நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் மனு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில், மாநில அமைப்பு செயலாளா் ஸ்ரீதா் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், விவசாயிகளின் விளைநிலங்களையும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளையும், நீா்வழி பாதைகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு அகோரித்துக்கொள்வதற்கான வகையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு மசோதா 2023-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த மசோதா நிறைவேற்றுவதன் மூலம் விவசாயின் உரிமைகள் பறிபோவதோடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிா்வாக அதிகாரம் அபகரிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு விவசாயிகளையும் காந்தி கண்ட கிராம ராஜ்யத்தையும் குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும்.

மேலும், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற சட்டத்தையும் முறியடிக்கும் வலிமை பெற்றது இந்த மசோதா. சட்டப்பேரவையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறைவேற்றப்பட்டதால் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்று இருந்தாலும் அவா்களுடைய கருத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிய வருகிறது. எனவே முதல்வா் உடனடியாக இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வின்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா் கமல்ராம், மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன், உயா் மட்ட குழு உறுப்பினா் ராமதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com