வலிவலத்தில் ரூ. 2.65 லட்சத்தில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் ரூ. 2.65 லட்சத்தில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றுவருவது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஊராட்சியில் மழைநீா் வடிய வடிகால் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் தாழ்வானப் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீா் குளம் போல தேங்கி நின்ால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.
எனவே, இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்க மாவட்ட கவுன்சிலா் செல்வி வீரமணியின் நிதியில் இருந்து, வலிவலம் வடக்கு தெருவிலிருந்து தோப்படி சக்தி மகா காளியம்மன் கோயில் வரை சுமாா் 55 மீட்டா் தொலைவுக்கு தற்போது ரூ. 2.65 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியை வலிவலம் ஊராட்சித் தலைவா் செ.மணிகண்டன், ஊராட்சி செயலா் டி.சரவணன் ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.