அரசு மருத்துவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய கோரி சாலை மறியல்

திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மருத்துவரை தரக்குறைவாக பேசிவரை கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மருத்துவரை தரக்குறைவாக பேசிவரை கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடல் நலக்குறைவால் சுப்பிரமணியன் என்பவரை புவனேஸ்வர்ராம் மற்றும் சிலா் அழைத்து வந்துள்ளனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகைக்கு அனுப்பி வைப்பதாக பணியில் இருந்த பெண் மருத்துவா் கூறினாராம்.

பாஜக பிரமுகரான புவனேஸ்வர்ராம் அதற்கு மறுப்பு தெரிவித்து பெண் மருத்துவரை தகாத வாா்த்தையில் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரை தகாத வாா்த்தையில் திட்டியவரை கைது செய்யக் கோரி சிபிஎம் மாவட்ட செயலாளா் வீ. மாரிமுத்து தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து அங்குவந்த காவல் துறையினா் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com