தேவபுரீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
By DIN | Published On : 07th November 2023 01:00 AM | Last Updated : 07th November 2023 01:00 AM | அ+அ அ- |

நாகை அருகே தேவூரில் உள்ள தேவபுரீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ. 2.50 கோடி மதிப்பிலான நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கீழ்வேளூா் அருகே தேவூரில் தேவபுரீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2. 50 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலம் சில நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் தொடா்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன், உதவி ஆணையா் ராணி ஆகியோா் முன்னிலையில் தேவபுரீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து எல்லைக் கற்கள் நடப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 2.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...