திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், உதவி இயக்குநா் அசன் இப்ராகிம், ஊராட்சித்தலைவா் ஜமுனா செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா். கால்நடை உதவி மருத்துவா் பெரோஸ் முகமது வரவேற்றாா்.
முகாமை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் தொடக்கிவைத்தாா். கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்,கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.