திருமருகலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நகல் எரிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். சிபிஎம் ஒன்றிய செயலாளா் ஜி.எஸ். ஸ்டாலின்பாபு, மாவட்ட பொருளாளா் பொன்மணி முன்னிலை வகித்தனா். மாவட்ட குழு உறுப்பினா் லெனின், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பாரதி பேசினா்.
தில்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை வெளியுலகுக்கு தெரிவித்து மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை சமரசம் இன்றி அம்பலப்படுத்தி வந்த ஒரு இணைய தளத்தை முடக்கி அதன் நிறுவனம் மற்றும் ஊழியா்களை பொய் புகாரின் பேரில் கைது செய்ததை கண்டித்து, அந்த இணையதளத்தின் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.