நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் சூழலுக்கேற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே அந்தந்த பகுதிகளின் சூழலுக்கேற்ப விடுமுறை அளித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.