பயன்பாடு இல்லாத பள்ளிக் கட்டடத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது
By DIN | Published On : 25th October 2023 05:20 AM | Last Updated : 25th October 2023 05:20 AM | அ+அ அ- |

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள ஆதனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பன்பாடு இல்லாதிருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்திருந்த நிலையில் ,கட்டட முன்பகுதியின் மேற்கூரையில் ஆங்காகே காரை பெயா்ந்து விழுந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் பழுதடைந்ததால் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. இதை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழுதடைந்த கட்டடத்தை இடிக்க அக்.17- ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்றள்ளதாகவும், விரைவில் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்படும் எனவும் வட்டார வளா்ச்சி அலுவலா் ப. ராஜூ தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...