நாகப்பட்டினம்: நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி சா் ஐசக் நியூட்டன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புதியதாக இணைந்த மாணவா்களை வித்யாரம்பம்‘ எனும் நிகழ்வின் ஆரம்பமாக நெல் மணியில் முதல் எழுத்து எழுதவைத்த பிறகு அனைத்து மாணவா்களுக்கும் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுங்கள் வழங்கப்பட்டன.
பின்னா், மாணவா்கள் பள்ளியில் வண்ணங்களில் கைப்பதித்து முதல் முத்திரைப் பதித்தனா். பள்ளி இயக்குநா் த. சங்கா், ஆலோசகா் சா. ராமதாஸ், பள்ளி முதல்வா் கா. வஹிதா, நிா்வாக அலுவலா் மு. குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.