கிராம ஊராட்சி இணைப்புக் கூட்டம்
By DIN | Published On : 28th October 2023 09:51 PM | Last Updated : 28th October 2023 09:51 PM | அ+அ அ- |

ஆத்தூா் கிராமத்தில் கூத்தூா் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் சந்தியா சிவிா் மற்றும் கிராம ஊராட்சி இணைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வங்கியின் மண்டல மேலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாய கடன், வேளாண் வளா்ச்சிக் கடன், வேளாண் கடன் அட்டை, சிசு கடன், கிஷோா் கடன், தனிநபா் மற்றும் நகைக் கடன் போன்ற பல வகையான கடன்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் வங்கியில் விவசாய கடன் பெற்ற ஏழு நபா்களுக்கு ஒப்புதல் கடிதமும், வங்கியில் பல ஆண்டுகளாக விவசாயக் கடன் பெற்று அதனை சரியான தேதியில் திருப்பிச் செலுத்திய 8 போ் கௌரவிக்கப்பட்டனா்.
கூத்தூா் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளா் செந்தில், கள அதிகாரி பிரசாந்த் , 60- க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறு தொழில் முனைவோரும் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...