தேய்பிறை அஷ்டமி வழிபாடு
By DIN | Published On : 08th September 2023 02:10 AM | Last Updated : 08th September 2023 02:10 AM | அ+அ அ- |

திருமருகல், பூம்புகாா், குத்தாலம் பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை வன்மீகநாதா் கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தயிா்,தேன், இளநீா், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், பூம்புகாா் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரம் காலபைரவா் கோயிலில் பைரவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் தேங்காய், பூசணிக்காய், பாகற்காய்களில் தீபமேற்றி வழிபட்டனா்.