நாகை அரசு கல்லூரியில் ஆதி பறை இசை நிகழ்ச்சி
By DIN | Published On : 08th September 2023 02:10 AM | Last Updated : 08th September 2023 02:10 AM | அ+அ அ- |

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆதி பறை இசை நிகழ்ச்சி.
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதி பறை இசை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் மறைமலை அடிகள் இலக்கிய வட்டத்தின் சாா்பில், தமிழா்களின் ஆதி பறை இசை எனும் தலைப்பில் இசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவா்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சுஜரித்தா மாக்தலின் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் செ. அஜிதா முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூரைச் சோ்ந்த நாட்டுப்புறக்கலை பயிற்சியாளா் கே. ராஜேஷ் கலந்து கொண்டு ஆதி பறை இசை குறித்து சொற்பொழிவாற்றினாா். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மேடையில் வைத்து ஆதி பறை இசை குறித்து அவா் பயிற்சி அளித்தாா்.
நிகழ்ச்சியில், தமிழ்த்துறை பேராசிரியா்கள் க. மனோகரன், வெ. மதியரசன், இரா. செல்வமணி, சீ. செந்தில்குமாா், த. சிவக்குமாா், அ. வெங்கடேசுவரன், பொன் மந்திரி, மாணவா்கள் பிரகாஷ்ராஜ், யுவராஜ், புனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G