

சீா்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினாா்.
சீா்காழி அருகே உள்ளது அண்ணன் பெருமாள் கோயில். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் செவ்வாய்க்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா், சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாக அதிகாரி அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.