

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
5 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இந்த கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது முதல் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.