நாகை அருகே பிரதாபராமபுரத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான இளைஞா் செஞ்சிலுவை பிரிவு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளா் க. வெற்றிவேல், இளைஞா் செஞ்சிலுவை பிரிவு மற்றும் அதன் பங்களிப்புகள் குறித்து பேசினாா். கல்லூரி செயலா் அ. ஆரோக்கியசாமி, நாகை மாவட்ட இளைஞா் செஞ்சிலுவை பிரிவு ஜி.வி. பாண்டியன், கல்லூரி பேராசிரியா் ஓ.ஏ.ஆா். முகமதுஹசன், முனைவா் ர. பிரின்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.