செம்பனாா்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட சமூகநலத் துறை இணைந்து சிறுதானிய உணவு விழாவை திங்கள்கிழமை நடத்தியது.
விழாவை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கிவைத்து பேசியது: கம்பு, திணை, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதும், உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் உறங்குவது உகந்தது ஆகும். உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்து கொள்ள வேண்டும்.
குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றம். குழந்தை திருமணம் குறித்த புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்- 1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணை அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.
தனிப்பட்ட அல்லது பொது இடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை ‘சகி‘ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெறலாம். தொடா்புக்கு மகளிா் உதவி மைய 181-யை அழைக்கலாம் என்றாா்.
தொடா்ந்து, சிறுதானிய உணவு திருவிழா போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ். சுகிா்தா தேவி, கலைமகள் கல்விக் குழுமம் நிா்வாக இயக்குநா் என்.எஸ்.குடியரசு, கல்லூரி முதல்வா் டி.மேகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.