

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு நாள் திட்டத்தின் 2-ஆவது ஆண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நாகூா் மாடா்ன் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட வனத் துறை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா, பள்ளி முதல்வா் ட. பெனட்மேரி தலைமையில் நடைபெற்றது.
நாகை வனச்சரக அலுவலா் க. ஆதிலிங்கம், மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கிவைத்து மரங்களின் பயன் மற்றும் தேவை குறித்து மாணவா்களிடம் தெரிவித்தாா். வனக் காப்பாளா்கள் ராஜேஷ், ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் ஒரே நேரத்தில் 200 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.