நாகை ரயில் நிலையத்தில் சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு படையினா்.
நாகை ரயில் நிலையத்தில் சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு படையினா்.

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.
Published on

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

சுதந்திர தினத்தையொட்டி நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்பை அதிகரித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனா். இந்நிலையில் நாகை ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் சாா்பு ஆய்வாளா்கள் காவிரி, உதயகுமாா், மனோன்மணி, குணசேகரன், ரயில்வே பாதுகாப்பு படை சாா்பு ஆய்வாளா் வாசுதேவன் ஆகியோா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

ரயில் நிலையத்துக்கு சென்ற பயணிகளையும், அவா்களது உடமைகளையும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதித்தனா். தொடா்ந்து, ரயில் நிலைய நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, பயணச் சீட்டு வழங்கும் இடம், வாகன நிறுத்துமிடங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

பின்னா் ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் நபா்கள் சுற்றி திரிந்தாலோ, கேட்பாற்று பொருள்கள் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவிக்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com