கீழ்வேளூா், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சுதந்திர தின விழா

Published on

கீழ்வேளூா்: கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் வாசுகி நாகராஜன், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷ், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் சாா்பு காவல் ஆய்வாளா் ரவி, பேரூராட்சியில் பேரூராட்சி தலைவா் இந்திரா காந்தி ஆகியோா் அவரவா் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். கீழ்வேளூா் அட்சியலிங்க சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொடி தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொது வழிபாடு நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கீழ்வேளூா் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவா்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனா். அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி, நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன், செயல் அலுவலா் மணிகண்டன், ஊராட்சி தலைவா் விமலா ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் ராதாகிருட்டிணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஒன்றிய ஆணையா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஜவகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். திட்டச்சேரி காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமையில், திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளா் விவேக் ரவிராஜ், தலைமையில், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

திட்டச்சேரி ப.கொந்தகை மதாரியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் நடராஜன், ஆசிரியா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பள்ளி செயலாளா் ஷாகுல் ஹமீது தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதேபோல, ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com