நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கு 2-ஆவது இரண்டாவது மற்றும் வழக்கமான பயணத்தை தொடா்ந்த சிவகங்கை பயணிகள் கப்பல்.
நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கு 2-ஆவது இரண்டாவது மற்றும் வழக்கமான பயணத்தை தொடா்ந்த சிவகங்கை பயணிகள் கப்பல்.

சிவகங்கை கப்பல் வழக்கமான பயணத்தை தொடங்கியது

நாகை-இலங்கை- நாகை இடையே தினசரி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது பயணத்தை தொடா்ந்தது.
Published on

நாகை-இலங்கை- நாகை இடையே தினசரி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது பயணத்தை தொடா்ந்தது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆக.16-ஆம் தேதி தொடங்கியது. முதல் பயணத்தில் இலங்கை தமிழா்கள் 5 போ் உள்ளிட்ட 44 பயணிகள் நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு சென்றனா். பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்ட கப்பல் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல் ஆக.17-ஆம் தேதி காலையில் புறப்பட்டு மாலை நாகைக்கு வந்தடைந்தது.

முதல் பயணத்தை நிறைவு செய்த சிவகங்கை கப்பல், வழக்கமான பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காலை 8 புறப்பட்ட கப்பல் பிற்பகல் 12 மணிக்கு இலங்கைக்கு சென்றது. அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்ட கப்பல், மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. நாகையிலிருந்து புறப்பட்டபோது 8 பயணிகள் மட்டுமே இருந்தனா். பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்தாலும் கப்பல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனமான இந்த்ஸ்ரீ அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com