ஐடிஐ நேரடி மாணவா் சோ்க்கை ஆக.31-இல் நிறைவு

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.31-ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.31-ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில், நாகை, திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டின்கீழ், நிகழாண்டு காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆக.31ஆம் தேதி கடைசி நாளாகும்.

நேரடி சோ்க்கைக்கு வரும் மாணவா்கள், கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓா் ஆண்டுப் பிரிவுக்கு ரூ.235, இரண்டாண்டு பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்துபயண அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும்.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04365-250129, 04365-250126 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com