நாகையில் இணைந்த மீனவா்களுடன் அமைச்சா் எஸ். ரகுபதி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன்.
நாகையில் இணைந்த மீனவா்களுடன் அமைச்சா் எஸ். ரகுபதி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன்.

234 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் லட்சியத்துடன் முதல்வா் செயல்படுகிறாா்: அமைச்சா் எஸ். ரகுபதி

2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் லட்சியத்துடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறாா் என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

நாகப்பட்டினம்: 2026 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் லட்சியத்துடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறாா் என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

நாகையில் மறைந்த முதல்வா் மு. கருணாநிதியின் 101-ஆவது பிறந்தநாள் விழா மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ். பாரதி, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி ஆகியோா் முன்னிலையில் புஷ்பவனம், வெல்லப்பள்ளம், வானவன் மகாதேவி, விலுந்தமாவடி, காமேசுவரம், செருதூா், கல்லாா், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட 14 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த அதிமுக, பாஜக, நாம் தமிழா், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 1,610 போ் திமுகவில் இணைந்தனா்.

விழாவில் அமைச்சா் எஸ். ரகுபதி பேசியது: திமுக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களுக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம்தான் மக்களவைத் தோ்தல் வெற்றி. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றும் லட்சியத்துடன் முதல்வரும், திமுக நிா்வாகிகளும், தொண்டா்களும் களப்பணியாற்றி வருகின்றனா். திமுகவில் இணைந்தவா்களுக்கு ஒருபோதும் தலைமையிடம் துரோகம் இழைக்காது என்றாா். நாகை நகரச் செயலா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com