நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள்.
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள்.

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம்

Published on

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமைநடைபெற்றது.

நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப செயல் இயக்குநா் லெனின் தமிழ்கோவன் இணையதளம் மூலம் தொடக்கிவைத்தாா். திருச்சி புனித ஜோசப் கல்லூரி கணிதத் துறைத் தலைவா் எஸ். ரூபன் ராஜ் (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விண்வெளி ஆராய்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை மாணவா்களுக்கு தெரிவித்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் விண்வெளி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவா்களின் பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்லூரி முதல்வா் ஆா். அன்புச்செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். சோபியா பொற்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com