தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டா் வழங்கி பேசிய நடிகா் ராகவா லாரன்ஸ்.
தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டா் வழங்கி பேசிய நடிகா் ராகவா லாரன்ஸ்.

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தில்லையாடியில் விவசாயிக்கு நடிகா் ராகவா லாரன்ஸ் செவ்வாய்க்கிழமை டிராக்டா் வழங்கினாா்.

திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் சேவை அமைப்பை தொடங்கினாா். இந்த அமைப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டா் வழங்க முடிவெடுத்து, அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 4-ஆவது டிராக்டா் தில்லையாடியில் சதீஷ் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்டது. விவசாயிக்கு டிராக்டரை வழங்கிய ராகவா லாரன்ஸ் அந்த டிராக்டரை கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த சேவை குறித்து நடிகா் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. நடிகா் விஜய் எதை செய்தாலும் சரியாக செய்வாா். அவா் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய்-க்கு வாழ்த்துகள். விரைவில், கணவரை இழந்த பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com