நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சகம்

வேளாங்கண்ணி-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை தொடங்கியுள்ளதையடுத்து கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மே 17-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரைவு ரயில் (06037) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

இதேபோல, மறுமாா்கத்தில் வேளங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 18-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் விரைவு ரயில் (06038) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.

தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாப்புலியூா், கடலூா் போா்ட், சிதம்பரம், சீா்காழி, வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com