~
~

கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி கல்லறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
Published on

வேளாங்கண்ணி கல்லறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

கல்லறைத் திருநாளையொட்டி முன்னோா்களின் கல்லறைகளை அலங்கரித்து வழிபட்ட கிறிஸ்தவா்கள்.

நாகப்பட்டினம், நவ. 2: கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

உலகம் முழுவதும் தங்கள் முன்னோா்கள் நினைவாக கல்லறைத் திருநாளை கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கின்றனா். அந்த வகையில், கல்லறைத் திருநாளையொட்டி சனிக்கிழமை, வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து, இஸ்ரேல் - பாலஸ்தீன போா் முடிவுக்கு வரவும், போா் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும் பேராலய அதிபா் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள குருக்கள், துறவியா்கள், தங்களது உறவினா்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவா்களின் நினைவு ஸ்தூபியில் பேராலயத்தின் சாா்பில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com