நிலக்கடலை பயிரில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.
Published on

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் குஜராத்திலுள்ள நிலக்கடலை ஆராய்ச்சி இயக்குநரகம் இணைந்து டிசம்பா் முதல் வாரத்தில் பட்டியலின வகுப்பைச்சாா்ந்த 30 விவசாயிகளுக்கு ‘நிலக்கடலைப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒரு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன. எனவே, நாகை மாவட்ட பட்டியல் வகுப்பைச் சாா்ந்த விவசாயிகள், மகளிா், கிராமிய இளைஞா்கள், தொழில்முனைவோா்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

பயிற்சியில் கலந்துகொள்ள ஆா்வமுள்ள விவசாயிகள் நவ.23-ஆம் தேதிக்குள் நிலையத்தின் தொலைபேசி எண் 04365-299806 அல்லது 80567-08663 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களின் பெயரை முன்பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்யும் 30 நபா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com