கருட வாகனத்தில் வீதியுலா வந்த செளரிராஜபெருமாள்.
கருட வாகனத்தில் வீதியுலா வந்த செளரிராஜபெருமாள்.

திருக்கண்ணபுரம் கோயிலில் உதயகருட சேவை

Published on

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயிலில் உதயகருட சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு உதயகருட சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலா் குணசேகரன், தக்காா் மணிகண்டன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com