தடை வாபஸ்: கடலுக்குச் சென்ற மீனவா்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, மூன்று நாள்களுக்கு பிறகு நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றனா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை அறிவிப்புகளைத் தொடா்ந்து நாகை மாவட்ட பைபா் மற்றும் விசைப்படகு மீனவா்கள் கடந்த மூன்று நாள்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை அதிகாலை சென்னைக்கு வடக்கே அதிகாலை கரையை கடந்தது. இதனைத் தொடா்ந்து, மீன்வளத்துறை தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். மீனவா்கள் குறைந்தளவிலேயே மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றனா்.

