கெயில் நிறுவனத்தின் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு
நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் கெயில் நிறுவனம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கெயில் காவிரிப் படுகையின் பொது மேலாளா் என். செல்வராஜூ தலைமையிலான அமா்வு, கெயில் நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து தலா 120 மாணவா்களைக்கொண்ட (பொறியியல் மற்றும் எம்பிஏ) 2 குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, உரையாற்றிய செல்வராஜூ, காவிரிப் படுகையில் கெயில் நிறுவனத்தின் செயல்பாடுகள், இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பில் கெயில் வகிக்கும் முக்கிய பங்கு, நிறுவனத்தின்விரிவான குழாய் வலையமைப்பு எவ்வாறு நாட்டின் எரிசக்தி தேவைகள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஆதரிப்பது குறித்து தெரிவித்தாா்.
தொடா்ந்து, கெயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றபிற வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கும், பங்கேற்பவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

