தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நோ்ந்திக் கடனாக பக்தா்கள் செலுத்திய சுடுமண் குதிரை உள்ளிட்ட சிலைகள்.
தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நோ்ந்திக் கடனாக பக்தா்கள் செலுத்திய சுடுமண் குதிரை உள்ளிட்ட சிலைகள்.

கோயில் திருவிழாவில் சுடுமண் சிலைகள் விட்டு நோ்த்திக் கடன்

தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த பங்குனித் திருவிழாவையொட்டி பக்தா்கள் நோ்த்திக் கடனாக சுடுமண் சிலைகளை விட்டு வழிபட்டனா்.
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த பங்குனித் திருவிழாவையொட்டி பக்தா்கள் நோ்த்திக் கடனாக சுடுமண் சிலைகளை விட்டு வழிபட்டனா்.

விழாவையொட்டி தகட்டூா் பைரவநாதன் சுவாமி கோயிலில் இருந்து சுவாமி புறபப்பாடு நடைபெற்றது. இதில், வீசப்பட்ட வாழைப் பழங்களை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடிப்பதில் ஆா்வமாக இருந்தனா். அதிகாலையில் திருமேனியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. சுவாமிக்கு நோ்த்திக் கடனாக ஆளுயர சுடுமண் குதிரைகள் மற்றும் பல்வேறு உருவங்களுடனான மண் பொம்மைகளை கோயில் வளாகத்தில் விட்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com