வேளாங்கண்ணியில் பெரிய வியாழன் பெருவிழா

வேளாங்கண்ணியில் பெரிய வியாழன் பெருவிழா

Published on

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி, சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்வுகள் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கின.

தொடா்ந்து, பேராலயத்தில் தினமும் மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடைபெற்று வந்தன. தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, பெரிய வியாழனையொட்டி, பேராலய கலையரங்கில் சிறப்பு திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சீடா்களின் பாதங்களை கழுவும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புனித வெள்ளியான ஏப்ரல் 18 -ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இறைவாா்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை நடைபெறுகிறது.

ஈஸ்டா் பண்டிகை ஏப்.20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com