நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Published on

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 30.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 5 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சிறப்பு நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 10 நபா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் இறப்பு நிவாரணத்தொகை, மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 23 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பரிசுத்தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் வெற்றி சான்றிதழ் என மொத்தம் ரூ.30. 40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com