தென்னை மரத்திலுள்ள விஷ வண்டுகளை அழிக்க கோரிக்கை

Published on

திட்டச்சேரி பேரூராட்சி ப. கொந்தகை பெருமாள் வடக்கு வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அங்கு தனியாா் மழலையா் பள்ளியும் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் அதிகளவில் கூடு கட்டியுள்ளது. இது அப்பகுதியில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, பேரூராட்சி மற்றும் தீயணைப்பு துறையினரும் விரைந்து விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

X
Dinamani
www.dinamani.com