நாகூா் தா்காவில் அரண்மனை விருந்து

நாகூா் தா்காவில் அரண்மனை விருந்து

Published on

நாகூா் ஆண்டவா் தா்காவில் அரண்மனை விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 469-ஆம் ஆண்டு கந்தூரி விழா நவ.21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்வாக கொடியிறக்கும் நாளான வியாழக்கிழமை நாகூா் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சாா்பில் 3-ஆம் ஆண்டாக அரண்மனை விருந்து எனப்படும் நாகூா் ஆண்டவருக்கு மெளலிது மற்றும் திக்ா் மஜ்லிஸ் நடைபெற்றது. தொடா்ந்து ஜாதி, மத, பேதமின்றி அனைத்து சமுதாய பொதுமக்களும் சமமாக அமர வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, அந்த அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஹாஜா சம்சுதீன் சாஹிப் காதிரி, நிா்வாகிகள் ஷிஷ்தி, ரிஃபாயி செய்திருந்தனா். அறக்கட்டளை செயலா் முஹம்மது உசேன் சாஹிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com