நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து ராமேசுவரம்-காசி ஆன்மிக சுற்றுப்பயணம் புறப்பட்ட பயனாளிகள்.
நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து ராமேசுவரம்-காசி ஆன்மிக சுற்றுப்பயணம் புறப்பட்ட பயனாளிகள்.

நாகையில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் தொடக்கம்

Published on

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் குழு நாகையில் இருந்து வியாாழக்கிழமை புறப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள வயதில் மூத்த ஏழை எளியோா் அரசு செலவில் ராமேசுவரம்-காசி ஆன்மிகச் சுற்றுப் பயணம் செல்ல, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன்மூலம் பயனாளிகள் தோ்வு செய்து அழைத்துச் செல்லப்படுகிறாா்கள். இதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுகொள்கிறது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான ராமேசுவரம்-காசிக்கான ஆன்மிக சுற்றுப் பயணத்துக்கான 30 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வியாழக்கிழமை ஆன்மிகப் பயணத்தை தொடங்கினா். பயணத்தை நாகை நீலாயத்தாட்சியம்மன் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் தொடங்கி வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com