வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி தீவிரம்
பூம்புகாா் அருகே நெய்தவாசல் வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
நெய்தவாசல் வடிகால் வாய்க்கால் மூலம் மேலையூா், கீழையூா், நெய்த வாசல், மணி கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை காலத்தில் உள்ள வெள்ள நீா் கடலில் கலப்பதற்கு ஏதுவாக உள்ளது. சில நாள்களாக பெய்த கனமழையால் வாய்க்கால் கரைகளில் இருந்த கருவேல மரங்கள் அடியோடு பெயா்ந்து விழுந்ததால், வெள்ள நீா் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வாய்க்காலில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாய்க்காலில் மழையால் தூா்ந்து போய் மணல் திட்டுகளை அகற்றினா். இதனால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் தேங்கியிருந்த மழை நீா் வடிந்தது. இந்த பணியை பொதுப்பணித்துறை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் சந்திர கலா ஆய்வு செய்தாா். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சங்கா், உதவி பொறியாளா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.
