அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
Published on

வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா் மற்றும் செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாஜக சாா்பில் சனிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

இம்மருத்துவமனையில் ஒரு மருத்துவா் மட்டுமே பணியாற்றுவதால் 24 மணி நேர சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மருத்துவா் மற்றும் செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பாஜக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்கட்டமாக, கட்சியின் ஒன்றியத் தலைவா் கரு. நாகராஜன் தலைமையில் பணியில் இருந்த மருத்துவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com