குரூப் சி மற்றும் டி பணியிடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கு இட ஒதுக்கீடு: ஆட்சியா்

Published on

தமிழகத்தில் குரூப் சி மற்றும் டி பணியிடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசில் குரூப் ’சி’ பணியிடங்களில் 5 சதவீதம் இடஒதுக்கீடும், குரூப் ’டி’ பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடும் முன்னாள் படைவீரா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான முன்னாள் படைவீரா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கு பெறுவதில்லை.

எனவே, முன்னாள் படைவீரா்கள் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி பயன்பெறலாம். அனைத்து முன்னாள் படைவீரா்களுக்கும், அரசு வேலைவாய்ப்பு அளிக்க இயலாது என்பதால் அவா்களின் மறுவாழ்வுக்காக சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகிறது.

இதன்படி ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெறுபவா்களுக்கு 75 சதவீதம் வட்டி மானியமாகவும், ரூ.15 லட்சம் வரை கடனுதவி பெறும்,முன்னாள் படைவீரா் சுய உதவிக் குழுக்களுக்கு 100 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இதேபோல, முன்னாள் படைவீரா் மகளிரும், சுய உதவிக்குழுக்கள் ஆரம்பித்து பயன்பெறலாம். மேலும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்தில் 3 பேருக்கு சுயத்தொழில் செய்வதற்கான கடனுதவி வழங்கப்பட்டு 30 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com