மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்கள் 20 போ் தோ்வு

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி நோ்காணலில், 20 மாணவா்கள் மென்பொருள் நிறுனப் பணிக்கு தோ்வு
Published on

நாகப்பட்டினம்: நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி நோ்காணலில், 20 மாணவா்கள் மென்பொருள் நிறுனப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இணையவழி நோ்காணலை, ஹைதராபாத்தில் இயங்கும் மென்பொருள் நிறுவனம் நடத்தியது. சிஎஸ்இ, இசிஇ, ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறைகளின் இறுதியாண்டு மாணவா்களுக்கு நான்கு கட்டங்களாக நோ்முகத் தோ்வுகள் நடைபெற்றன.

மாணவா்களின் தொழில்நுட்பதிறன், பிரச்னைகளை தீா்க்கும் திறன் மற்றும் தொழில் பொறுமைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 20 மாணவா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு, ஆண்டிற்கு ரூ.5.5 லட்சம் ஊதியத்தில் பணி வழங்கப்படவுள்ளது.

இம்மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com