திருக்குவளை அருகே குடும்ப பிரச்னையில் நுகா்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருக்குவளை அருகேயுள்ள முத்தரசபுரத்தைச் சோ்ந்தவா் கலைமணி (40). நுகா்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளராக பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளியான இவருக்கு மனைவி மேகலா, இரு குழந்தைகள் உள்ளனா்.
குடிப்பழக்கத்தால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுமாம். அதில் மன உளைச்சலில் இருந்த கலைமணி திங்கள்கிழமை வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.