மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளை பாராட்டிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளை பாராட்டிய ஆட்சியா் ப. ஆகாஷ்.

மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

Published on

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டுவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள், தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற்கு வழங்கப்பட்ட கோப்பைகள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டுவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள் டிசம்பா் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், மண்டல அளவில் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் தஞ்சாவூா் அரசு குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனா்.

இதில், வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுல இல்ல குழந்தைகள், கைப்பந்துப் போட்டியில் முதலிடம், நடனப் போட்டியில் மூன்றாமிடம், பாட்டுப் போட்டியில் மூன்றாமிடமும், வேளாங்கண்ணியில் உள்ள புனித டான் போஸ்கோ இல்ல குழந்தைகள் பாட்டு போட்டியில் முதலிடமும், 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றனா்.

போட்டிகளில் பெற்ற வெற்றிக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை காட்டி குழந்தைகள் பாராட்டு பெற்றனா்.

நிகழ்வில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம. ரஞ்சித்குமாா் மற்றும் குழந்தைகள் இல்லப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com